Sunday, January 08, 2012

"கொலவெறி" பாடலுக்கு கண்டனமும் எதிர்ப்பும்


நடிகர் தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொல வெறி டி சினிமா பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து உள்ளது. மொழி தெரியாதவர்கள் கூட முணு முணுக்கும் மந்திரமாக இந்தப் பாடல் பிரபலமாகி இருக்கிறது.

தனுஷையும், இசை அமைப்பாளர் பிரகாசையும் உச்சானி கொம்புக்கு கொண்டு சென்று விட்டது. இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர் ரத்தன் டாடா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரபலங்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்கும் வாய்ப்பு, இந்த பாடல் மூலம் தனுசுக்கும் கிடைத்தது. 

ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டாலும், மறுபுறம் சர்ச்சைகளும் எழாமல் இல்லை. இந்தப் பாடல் வெளியான உடனேயே பெண்கள் அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் இலக்கியவாதிகள் கடுமையாக விமர்சித்தனர். உலகளவில் பிரபலமாகும் அளவிற்கு தரமான பாடலா? என்று கேள்வி எழுப்பினர் சிலர். ரசிகர்களை முட்டாளாக்கி விட்டனர் என்று கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து உள்ளார். எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இல்லாத பாடல் ஒன்று என்றால் அது ஒய்திஸ் கொல வெறி டி பாடலாகத்தான் இருக்க முடியும். அர்த்த மற்ற ரசனையாக உள்ளது.

நல்ல அர்த்தங்களும், தத்துவங்களும் நிறைந்த பாடல்கள் ஏராளம் உள்னன. அவற்றுக்கு கூட இவ்வளவு வரவேற்பு இல்லை இந்த பாடலுக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதன் மீதான ரசனையை என்ன வென்று சொல்வது? என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

0 comments:

Post a Comment