Wednesday, January 04, 2012

உயர்தரத்தில் சித்தியடையாவிட்டாலும் பட்டப் படிப்புக்கான வாய்ப்பு


(பஹமுன அஸாம்) 
இலங்கை அபிவித்தியின் கீழ்மட்டத்தில் இருப்பது இளைஞர், யுவதிகளின் திறன் மற்றும் தொழில்நுட்பம், தொடர்பாடல் என்பன குறைந்த மட்டத்தில் இருப்பதனாலாகும். தற்போது 16% ஆகக் காணப்படும் தொழிற் பயிற்சியை விருத்திசெய்து, ஒரு வருடத்தில் 1,30,000 பேரை தொழிற் பயிற்சியில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை இரத்மலானை தொழில்நுட்பக் கல்லூரியின் எதிர்கால திட்டங்கள் பற்றி ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும்போதே இளைஞர் சேவைகள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அலகப்பெரும குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட இரத்மலானை தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 26 பேருக்கு பட்டமளிக்கப்படவுள்ளதோடு 313 பேருக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.

க.பொ.த. சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகள் சித்தியடையாவிட்டாலும் பட்டப்படிப்புக்கான சந்தர்ப்பம் இதன்மூலம் கிடைக்கின்றது. சாதாரணதரம், உயர்தரம் சித்தியடையவில்லை என்று மாணவர்கள் இனி கலலைப்படத் தேவையில்லை. தேசிய தொழில் தகமை(NVQ) தரம் 1இல் இருந்து 7 வரை கற்போருக்கு இந்த பட்டம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment