வன்முறைக்கு எதிரான பெண்கள் நாம் தேசிய வலையமைப்பின் அனுசரனையுடன் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், மகளிர் அபிவிருத்தி மன்றம், மறுமலர்ச்சி மன்றம், அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு என்பன ஒன்றிணைந்து அம்பாரை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக விளிப்புணர்வூட்டும் வீதிநாடகங்களையும் நடாத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின்கீழ் இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா சந்தி மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் நடைபெற்ற விளிப்புணர்வூட்டும் வீதிநாடகங்களின் காட்சிகளையும் அதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இந்நிகழ்வை வன்முறைக்கு எதிரான பெண்கள் நாம் தேசிய வலையமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களான திருமதி வாணிசைமன், காந்திமதி ஜோய், சுரோஜினி ஆகியோர் நெறிப்படுத்தனர்.
0 comments:
Post a Comment