Monday, January 09, 2012

பியசேன எம்.பி. ரஜமஹா விகாரைக்கு விஜயம்


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் அழைப்பின்பெயரில் அக்கரைப்பற்று ரஜமஹா விகாரைக்கு நேற்று முந்தினம் விஜயம்செய்த பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.எம் ஜோன் செனவிரத்தின அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் தமிழ் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலை நடாத்தினார்.

இக்கலந்துரையாடலின்போது கல்முனை தமிழ் பிரிவு, நாவிதன்வெளி, காரைதீவு, ஆலையடி வேம்பு, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அவ்வப்பிரதேச செயலாளர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, பிரதேச செயலாளர்களான வீ.லவனாதன், கலாநிதி எம்.கோபாலரத்தினம், எம்.ராமகிருஷ்னண், எஸ்.கரண், வீ.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment