Sunday, January 08, 2012

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் கிளார்க்கிற்கு அடித்த யோகம்


அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பேட்டில் விளம்பரம் செய்ய ரூ. 5 கோடியே 30 லட்சம் அளிக்க ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம் இந்த அளவு அதிகமான தொகைக்கு அவர் ஒப்பந்தமாக உள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சின்னம் பொறித்த பேட்டை வைத்து விளையாடுவார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது.

0 comments:

Post a Comment