Friday, January 06, 2012

ஐ.தே.க. தலைமையகம் மூடப்பட்டுள்ளது; பூட்டை உடைக்கப் போகிறேன் - சஜித்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள உத்தியோகபூர்வ காரியாலயம் மூடப்பட்டுள்ளதாகவும்,  அதனால் அதற்குள் பிரவேசிக்க முடியாத நிலைமை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பூட்டை உடைத்து தமது ஆவணங்களை எடுக்கப் போவதாகவும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு தமது தலைமையில் இன்று கூட்டம் நடைபெறும். கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச பொதுமக்களின் வாக்குகளினால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான தாம் மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட்டிருந்த தனியான அறை, கட்சி உறுப்பினர்களின் ஓய்வு அறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதேவேளை, சிறிகொத்தவில் சஜித் பிரேமதாசவிற்கு தனியான அறைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment