Friday, January 06, 2012

இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கல்


இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 90 பேர் புதிதாக நியமனங்களை பெற்றுக்கொண்டனர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக பிரேதேச செயலகங்களில் காணப்படும் இளைஞர், யுவதிகளின் தேவைகள் குறித்தும் இவர்கள் செயலாற்ற வேண்டும். அத்துடன் பொறுப்புணர்வுடன் தமது கடமைகளை நிறைவேற்றி புதிய இளைஞர் பரம்பரையினரை உருவாக்க வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார் 

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் துமிந்ந திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் .தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா, மன்றத்தின் பணிப்பாளர்கள், பணிப்பாளர்சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். வடக்கு, கிழக்குப் பகுதியில் இருந்து தமிழ், முஸ்லிம் அதிகாரிகள் 12 பேர் நியமனம் பெற்றமை இங்கு விசேட அம்சமாகும் 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வழங்கப்படும் நியமனம்தான் அதிகூடிய நியமனம் என்று மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார். நியமனம் பெற்ற 90 பேருக்கும் எதிர்வரும் 09-12 ஆம் திகதி வரை இலங்கை  மன்றக் கல்லூரில் பயிற்சி செயலமர்வு இடம்பெறும்.




 


0 comments:

Post a Comment