உலக சனத்தொகை 7 பில்லியனை நெருங்கிவிட்டது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பி.பி.சி. இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. உங்களின் பிறந்த திகதி மாதம் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான இடத்தை அந்த இணைப்பு தருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டள்ளதாம். நீங்களும் 700 கோடி சனத்தொகையில் எத்தனையாவதாகப் பிறந்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.


0 comments:
Post a Comment