தனக்குப் பணம் வழங்காவிட்டால் பாதாள உலகத்தினரை வைத்துக் கொல்லப் போவதாக தனது தந்தைக்கே அச்சுறுத்தல் விடுத்துள்ளார் இலங்கை நடிகை அனுஷ்கா சோனலி. இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையின் சிங்கள தொலைக்காட்சி நடிகையான அனுஷ்கா சோனலி செய்யக்காரவை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பலமுறை பணம் கேட்டு மகள் தன்னை தொந்தரவு பண்ணினார் என்றும் அவ்வாறு வழங்காவிடின் பாதாள உலகத்தினரின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வேன் என அச்சுறுத்தினார் எனவும் அனுஷ்கா சோனலி செய்யக்கார மீது அவரது தந்தையான செய்யக்கார கொம்பனித்தெரு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு, கோட்டை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது ரூபா 4000 ரொக்கப் பிணையிலும் 25.000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார். அனுஷ்காவின் மிரட்டல் காரணமாக அவரது தந்தைக்கு ரத்த அழுத்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.


0 comments:
Post a Comment