Thursday, October 06, 2011

பாராளுமன்றத்தில் வாணிவிழா


நவராத்திரியின் இறுதி நாளான இன்று வியாழக்கிழைமை புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணக்களத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி பூஜையை நடத்தியது. 
இந்தப் பூஜையில் பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தன, சிரேஷ்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், அப்பாத்துரை விநாயகமூர்த்தி உட்பட சில எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். 

இன,மத பேதமின்றி பாராளுமன்றத்தில் வருடாந்தம் நடத்தப்படும் இவ் வாணிவிழா பூஜைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயக மூர்த்தியைத் தவிர எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ இப்பூஜையில் கலந்து கொள்ளவில்லை. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சியொன்றும் இடம்பெற்றது.




0 comments:

Post a Comment