நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமாகாண முஸ்லிம் இடம்பெயர்ந்து 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் கொழும்பு இருக்கிறம் அலுவலகத்தில் நடைபெற்றது. புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சம்மேளனமும், யாழ். முஸ்லிம் வலைத்தளமும் இந்த கவிதைப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தன. இதற்கு இருக்கிறம் சஞ்சிகை ஊடக அனுசரனை வழங்கியிருந்தது.
இருக்கிறம் சஞ்சிகையின் ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக என்.எம். அமீன் (ஆசிரியர்-நவமணி, தலைவர்- முஸ்லிம் மீடியா போரம்) அவர்களும் சிறப்பு அதிதியாக சாந்தி சச்சிதானந்தம் (பிரதம முகாமையாளர்- இருக்கிறம் சஞ்சிகை, CEO-விழுது) அவர்களும் சிறப்பு அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் (பணிப்பாளர் சபை உறுப்பினர், சுயாதீன தொலைக்காட்சி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் அந்நிகழ்வில் வழங்கப்பட்டன.

துருவம் அலுவலக செய்தியாளர்

துருவம் அலுவலக செய்தியாளர்










0 comments:
Post a Comment