Thursday, October 27, 2011

இழுபறிக்குள் அட்டாளைச்சேனை சந்தை


அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல இழுபறிக்கு மத்தியில் அங்கு சந்தை அமைப்பதற்கான நிதி கிடைத்தும் அதனை இன்னும் அமைக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபை அமைச்சருக்கும் பிரதேசசபை தவிசாளருக்கும் மத்தியில் இந்த புதிய சந்தைக் கட்டிடம் இழுபறிகள் இருக்கிறது. தற்காலிக சந்தை பள்ளிவாசலுக்கு முன்னால் நூலகத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.

ஆனால், அது பொருத்தமில்லை என்று தற்போது புதிய இடத்தில் அமைப்பதற்காக இவ்வளவு காலமாக இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு நிரந்தரமான ஒரு சந்தை அமைக்க முடியாமல் கையில் நிதியை வைத்துகொண்டிருகின்றனர். எப்படியாவது அவசரம் அவசரமாக இந்த சந்தைக் கட்டிடத்தை அமைத்து தருமாறு மக்கள் சம்பத்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர் 

0 comments:

Post a Comment