Friday, October 28, 2011

கடாபிக்கு இன்று ஜனாஸா தொழுகை


கிளர்ச்சியாளர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட லிபிய நாட்டின் முன்னாள் அதிபர் கேர்ணல் கடாபிக்கு இன்று வெள்ளிகிழமை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இன்னும் பல பள்ளிவாசல்களிலும் இத்தொழுகை நடைபெற்றது.

இன்று ஜும்மா தொழுகையின் பின்னர் கடாபியின் ஆத்ம சாந்திக்காக வேண்டி இந்த ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது. கடாபி இலங்கை முஸ்லிம்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அத்துடன் பல குர்ஆன் மத்ரஸாக்களுக்கும் நிதியுதவி செய்துள்ளார். அத்துடன் கடாபிக்காக துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றது. 

கிழக்கிலிருந்து முஹம்மட் பிறவ்ஸ்

0 comments:

Post a Comment