Saturday, October 29, 2011

ஜீவாவுடன் ரிச்சா ஜோடி சேரக்கூடாது-சிம்பு

ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு வந்தது. பிறகு அது ஜீவா கைக்கு மாறியது. அப்படம் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அறிவித்தது அவர்களின் மோதலை தீவிரமாக்கியது. தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுசுடன் “மயக்கம் என்ன”, சிம்புவுடன் “ஒஸ்தி” படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இயக்குநர் அஹமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம்.

இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த “வாமணன்” படத்தை டைரக்டு செய்தவர். ரிச்சாவும் ஜீவாவுடன் நடிக்க முதலில் சம்மதித்ததாக கூறப்படுகிறது. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றாராம். கதாநாயகி முடிவான திருப்தியில் அகமது பட வேலைகளை துவக்கினார். தற்போது திடீரென அகமதுவிடம் ஜீவா ஜோடியாக நடிக்க முடியாது என ரிச்சா மறுத்துவிட்டாராம். கால்ஷீட் தருவதாக கூறிய ரிச்சா திடீரென மனம் மாறிய காரணம் புரியாமல் இயக்குனர் குழம்பி போய் உள்ளார். “ஒஸ்தி” படப்பிடிப்பில் சிம்புவுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிம்புதான் ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என ரிச்சாவிடம் சொல்லி தடுத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது.

0 comments:

Post a Comment