Sunday, October 30, 2011

வெள்ளம் ஏற்படுவதற்கு யார் காரணம்?


தற்போது நாடு முழுவதும் மழை பெய்து வருகின்றது. கிழக்கில் கடந்த வருட இறுதியிலும், இவ்வருட ஆரம்பத்திலும் வெள்ளம் ஏற்பட்டு பல கோடிகளை ஏப்பம் விட்டதும் யாவரும் அறிந்த விடயம். வெள்ளம் ஏற்படுவதற்கும், மக்களினதும், பொருட்களினதும் அழிவுக்கு நமது மக்களும், அவர்களது செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை. அரசியல் செய்வோர் தமக்குரிய பங்கிற்கு வீதியில் கிறவல் இட்டு வீதியை உயர்த்திவிடுவார்கள். மழைகாலம் வந்தவுடன் வீதித்தண்ணீர் முழுவதும் வீட்டுக்குள். சதுப்பு நிலங்களை மண்ணிட்டு மூடி வருகின்றமை, ஆற்றோரங்கள் மண்ணிட்டு மூடுதல் போன்ற காரணங்களால்தான் வெள்ளம் ஏற்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வெள்ளம் வழிந்தோடுகிறது. மேலே கூறப்பட்ட இக்காரணங்களும் இங்கு பொருந்தும். 

அதேவேளை அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் நேரடியாக வந்து வீதியில் வெள்ளநீர் நிறைந்திருந்த ஒரு வீதியை தோண்டி இயந்திரத்தின் உதவியுடன் நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவ்வீதியிலுள்ள சிலரின் அட்டகாசமாக பேச்சுக்களால் விட்டால் போதும் என்ற நிலையில் தோண்டப்பட்ட வீதியை இடையில் விட்டுவிட்டு போய்விட்டார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிகாரத்திலுள்ளவர்களுக்கே இந்தக்கதி என்றால் வெள்ளம் ஏற்படாமல் என்னதான் செய்யும். மக்களும் நன்மை செய்ய நினைக்கும் அதிகாரத்திலுள்ளவர்களுடன் ஒத்துப் போகின்றபோது அது மக்களும் நன்மை பயக்கும். வெள்ளநீர் ஓடி வழிந்தோடவும் வழிகிடைக்கும்.

(தோண்டுவதற்கு முயற்சித்த வீதியில் நீர் நிறைந்து காணப்படுவதை படங்களில் காணலாம்)




அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment