Sunday, October 30, 2011

கிழக்கில் மீண்டும் வெள்ள அபாயம்


அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கரையோரத்தின் தாழ்நிலங்கள் பலவற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல வீதிகளுக்கு மேலாக வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றன.  அத்துடன், கல்முனை- அம்பாறை பிரதான வீதியின் மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்போக நெல் விதைப்பு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விதைக்கப்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 





0 comments:

Post a Comment