Sunday, October 30, 2011

எழுத்துப்பிழைவிடும் ஆசிரிய ஆலோசகர்கள்


கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நேற்று (29.10.2011) நடைபெற்ற ஆசிரிய ஆலோசகர் தெரிவுப் பரீட்சை கல்முனையில் நடைபெற்றது. பரீட்சை மண்டப வாசலில் காணப்பட்ட கரும்பலகையில் காலை AM என்பதும், மாலை PM என்பதும் தெரியாது இரண்டு வேளைக்கும் AM என்றே எழுதப்பட்டிருந்தன. 

கல்வித்துறையில் அதுவும் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் ஆலோசகர்களுக்கான பரீட்சை நிலையம் ஒன்றில் இந்தப் பிழை நடந்திருக்கிறது என்றால் பரீட்சையிலும் பிழை விடாமலா இருக்கப் போகின்றது...? முதலாவதாக நடைபெற்ற பொது நுண்ணறிவு பரீட்சைக்குரிய தாளில் விடையளிப்பதா, வேறாக விடையளிப்பதா என்பது தெரியாது பரீட்சார்த்திகளும், பரீட்சை நடாத்தியவர்களும் குழப்பத்துடன் காணப்பட்டனராம். பின்னர் இரண்டாவது பரீட்சையின்போது வினாப்பத்திரத்தை வாங்கிய நிகழ்வு சரியான திட்டமிடல்கள் இல்லாத ஒரு பரீட்சையாகவே காணப்பட்டதாக பரீட்சார்த்திகள் கவலை தெரிவிக்கின்றனர். 

ஒரு மாகாண அமைச்சினால் நடாத்தப்படுகின்ற ஒரு பரீட்சை சரியான திட்டமிடல்களுடன் நடைபெறுவது சாலச்சிறந்தாக அமையும். அத்துடன் இவ்வாறான பிழைகளையும் உரியவர்கள் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்வது நல்லது. துருவம் எப்போதும் உன்னிப்பாக நாட்டு நடப்புகளை அவதானித்துக்கொண்டை இருக்கும்.




அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment