Saturday, October 29, 2011

அமெரிக்காவில் தாடி வைக்க அனுமதி


அமெரிக்க வாழ் இந்தியர் திரிலோசன் சிங் ஒபராய் (63). சீக்கியரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு சிறையில் காவலராக பணிபுரிந்தார். கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் அல்-ஹைதாக்கள் தாக்குதல் நடத்தி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். இதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து தீவிரவாதிகளை அடையாளம் கண்டு பிடிப்பதற்காக அமெரிக்காவில் தாடி வைத்திருப்பவர்கள் அவற்றை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு திரிலோசன் சிங் ஒபராய் மறுப்பு தெரிவித்தார். தாடி தனது மத அடையாளம். எனவே, அதை அகற்ற முடியாது என்றார். அதை தொடர்ந்து அவர் சிறைகாவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து கலிபோனியாவில் உள்ள பெர்சனல் போர்டில் அப்பீல் செய்தார். இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மீண்டும் சிறையில் பணி வழங்கி உத்தரவிட்டப்பட்டது.

மேலும் இந்திய ரூ.1 கோடியே 45 லட்சம் நஷ்ட ஈடுவழங்கவும் உத்தரவிடப்பட்டது. திரிலோசன் சிங் ஒபராய் வருகிற நவம்பர் 1ஆம் திகதி முதல் மீண்டும் பணியில் சேரஉள்ளார்.

0 comments:

Post a Comment