மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் நேற்று இரவு பாம்பு தீண்டியதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு சமையல் அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது சமையலறை கதவில் உள்ள இடைவெளியூடாக வந்த பாம்பு தீண்டியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தேற்றாத்தீவு வைத்தியர் வீதியை சேர்ந்த வசந்தி என்ற 30 வயது பெண்ணே உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையை வைத்தியசாலை பணிப்பாளர் கு.சுகுணன் மேற்கொண்டார். இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments:
Post a Comment