Saturday, October 29, 2011

அல்-அஷ்ஹர் புலமைப்பரிசில் பாராட்டுவிழா


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட ஒலுவில் அல் அஷ்ஹரின் மாணவர் களையும், ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவம் வழங்கிய ஒலுவில் அஷ்ஹரின் ஒளிக்கீற்றுக்களுக்கான  மாபெரும் விழா - 2011 ஒலுவிலில் நடைபெற்றது.

இவ்வாண்டு (2011) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பேறுபேற்றினை அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள ஒலுவில் அல்-அஷ்ஹர் வித்தியாலத்திலிருந்து 9 மாணவர்கள் தேறினர். அவர்களையும், மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களான எஸ். எல். மன்சூர், எஸ்.எல். றம்சான் ஆகியோரையும், பாடசாலையின் ஸ்தாபகரான எம்.ஏ. மீராலெவ்வை மற்றும், எம். எஸ்.எம்.ஹனீபா ஆகியோரையும் பாராட்டி கௌரவம் வழங்கிய மாபெரும் விழா ஒலுவில் அல் அஷ்ஹர் சதுக்கத்தில் கடந்த 14.10.2011அன்று நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏல்.எல்.எம். காசீம் மௌலவி, அட்டாளைச்சேனைக் கோட்டக்கல்வி அதிகாரி என்.கே.எம். இப்றாகீம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளையும், விழாவுக்கான நினைவுப் புத்தகம் வெளியீடு, நினைவுச்சின்னம் வழங்குதல், பாராட்டுக்கள் போன்றன நடைபெற்றன.

 

அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment