Saturday, October 29, 2011

ஆசிரிய ஆலோசகர் பரீட்சை நேற்று


ஒத்திவைக்கப்பட்ட ஆசிரிய ஆலோசகர்களுக்கான பரீட்சை (ISA) நேற்று (2011.10.29) நடைபெற்றது. கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் கடந்த 22.10.2011 ஆம் திகதி நடைபெறவிருந்த ஆசிரிய ஆலோசகர்களுக்கான போட்டிப் பரீட்சை நேற்று (2011.10.29) கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.

இதற்கு அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை கல்வி வலயங்களிலுள்ள தகுதியுடைய ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட அனுமதி அட்டையே அன்றைய பரீட்சைக்கு பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு, பரீட்சை நடைபெற்றது. கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் கடந்த காலங்களில் வெற்றிடமாகக் காணப்பட்டுவந்த பாடங்களுக்கான ஆசிரிய ஆலோசகர்களை நியமிக்கவேண்டியே இப்பரீட்சை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரீட்சைக்கு மிகவும் கடினமான முறையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைக்கு சென்ற ஒரு ஆசிரியர் எமது துருவம் இணையத்தளத்துக்கு தெரிவித்திருந்தார். இதனால் எதிர்பார்த்தளவு இலக்கை அடையமுடியமால் போகலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment