Thursday, October 27, 2011

RA-ONE இல் ரஜினி நடித்த காட்சிகள் (Video)


RA-ONE இல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காட்சிகள் தியேட்டர்களில் பட்டையை கிளப்புகின்றன. தமிழ் ரசிகர்களுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியை திரையில் பார்ப்பதை தரிசனக்காட்சியை போன்று பார்க்கின்றனர். 7ஆம் அறிவு, வேலாயுதம் ஆகிய இரு படங்களும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு சரவெடி கொளுத்த, சத்தமில்லாமல் வடக்கே பிரமாண்ட வெற்றி நோக்கி போகிறதாம் ஷாருக்கானின் RA-ONE படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் என்பதற்காகவே சில தமிழக ரசிகர்கள் வடநாட்டு தியேட்டர்கள் நோக்கி படையெடுத்திருக்கிறார்கள். RA-ONE படத்தில் ரஜினி நடித்த காட்சியை மத்திரம் எப்படியோ படம்பிடித்து யூடியூப்பில் போட்டு விட்டார்கள். இந்தப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி விருந்தாக அமைந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.


0 comments:

Post a Comment