சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு செயற்றிட்டத்தின்கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நெருப்புக்காய்ச்சல் (தைபோயிட்டு) பரவுதை தடுக்கும் முகமாக பாடசாலை ஆசிரியர்களுக்கு TAV வக்சின் ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருகட்டமாக கடந்த 2011.10.19ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன. அதனை பிரதேச பொதுச் சுகாதார அதிகாரி S.T.K. ரகுமான் தலைமையில் ஒலுவில் நகரத்திலுள்ள பாடசாலைகளான அல்-அஷ்ஹர், அல்-ஹம்றா, அல்-ஜாயிஷா, பாத்திமா ஆகிய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஊசியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்னரான வாரத்தில் இப்பிரதேசத்திலுள்ள உணவுப் பொருட்களை கையாளுகின்றவர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் இத்தடுப்பூசி மருந்து ஏற்றபட்டது எனவும் பொதுச் சுகாதார அதிகாரியான தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்


0 comments:
Post a Comment