Monday, October 31, 2011

வெற்றிப் பாதையில் "வேலாயுதம்"


விஜய் படம் ஊத்திக்கிட்டாலே “சும்மா காட்டு காட்டுன்னு காட்டுவோம்", இதில படம் வேற பத்திக்கிச்சா “காட்டாம இருந்தா நல்லா இருக்குமா அண்ணா?" தீபாவளிக்கு வந்த திரைப்படங்களில் வேலாயுதம் சரவெடி, எதிரிக்கு நெத்தியடி. இதற்கு முதற் காரணம் இயக்குநர் ராஜா ரசித்து, ருசித்து விஜய் ரசிகர்களுக்காக பண்ணிய விறு விறு திரைக்கதை. இரண்டாவது என் நாயகன் விஜய், மூன்றாவது சந்தானத்தின் காமெடி, நான்காவது அழகு தேவதைகள் ஹன்ஸிகா–ஜெனிலியா, ஐந்தாவது விஜய் அன்டனியின் என்ற இசை நாதம். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

படங்களில் வித்தியாசம் காட்ட வேண்டியது திரைக்கதையே. அதை வேலாயுதத்தில் முடிந்தளவு நிறைவேற்றி இருக்கிறார் இயக்குநர். உதாரணத்திற்கு க்ளைமாக்ஸ் சீனையே எடுங்கள். அது அந்நியனை நினைவு படுத்துகின்றது என்பதை நான் மறுக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் நேரு ஸ்ரேடியமாகவும் இருக்கலாம். அதில் என்ன மாற்றத்தைச் செய்யலாம்.

வேலாயுதத்தின் ஒரு பெரிய குறையைக் கண்டு பிடித்திருந்தார். அதாகப்பட்டது என்னவெனில் "200 கிலோமீற்றர் வேகத்தில் வரும் ரெயினில் எப்படி ஹீரோ தாவி ஏறுவார்?" இதுதான் தமிழ் சினிமா. இது உங்களுக்குத் தெரியாததல்ல. 1000 கிலோமீற்றர் வேகத்தில் சுற்றும் காற்றாடி இடைவெளிக்குள் ஸ்ரீகாந்தால் பாயமுடியும் (போஸ்) எனில், இதே 200 கிலோமீற்றர் வேகத்தில் ஓடும் ரெயினின் இரண்டு பெட்டிகளுக்கிடையே அஜித்தால் பைக்கில் பாயமுடியும் எனில், (பரமசிவன்) விஜயால் ஏன் முடியாது?

தீபாவளி ரேஸில் வேலாயுதம் முந்திவிட்டது. நீங்கள் ஆயிரம் குறைகளை அள்ளி வீசினாலும் படம் செம ஹிட். விஜய்க்கு காவலனைத் தொடர்ந்து அடுத்த வெற்றி. (நண்பனில் ஹிட்ரிக் வாய்ப்பு பிரகாசம்) ராஜாவுக்கு ஆறாவது தொடர் வெற்றி. ராசியில்லாத நாயகி ஹன்ஸிகாவுக்கு முதல் வெற்றி.

விஜய்

சின்னத்தாமரை… பாடலுக்குப் பிறகு அண்ணனுக்கு புதுப் புது க்கெயார் ஸ்டைல் எண்டா ரொம்ப இஸ்டம் போலிருக்கு. சடுகுடு… காவலனையும் தொடர்ந்து இப்படத்திலும் மாயம் செய்தாயோ.. பாடலுக்கு ஜெல் ஜொலிக்கிறது. மூன்று நாள் மீசை, தாடி (திருமலை போல்) விஜய்க்கு எப்பவும் அழகு. எதற்கு சில இடங்களில் தேவையில்லாமல் கீறியது போன்ற மீசை அலங்காரம். ஒட்டவில்லை. இனிவரும் படங்களில் கழற்றி விடவும்.

பாடல்களில் அதே பின்னிப் பெடலெடுக்கும் நடன அசைவுகள். காமெடியில் கலகல, துருதுரு நடிப்பு. ஆக்சனில் ஆக்ரோசம், சென்டிமென்டில் மெல்லிய சோகம் என அசத்திவிட்டார். அதுவும் ஆரம்ப கிராமத்து காட்சிகளில் பரோட்டா சூரி, பாண்டி, சரண்யா, ஹன்ஸி செல்லத்துடன் கலக்கியிருக்கிறார். பாவம், அந்த கைக்கு எட்டிய கோழிதான் வாய்க்கு எட்டவில்லை.

சந்தானம்

என்னத்தை சொல்ல.../ தமிழ்ப்படங்களில் தவிர்க்க முடியாத நாயகனாகிவிட்டார். அப்பப்பா....! சான்ஸே இல்ல. வேலாயுதம் படத்தில் சந்தானத்தின் எந்தவொரு காமெடியையும் TVயில் பார்த்தால் சிரிப்பே வராது. காரணம் ஒவ்வொரு காட்சிகளும் கதையோடு ஒட்டியோ பயணிக்கிறது. திரைக்கதையை நகர்த்துவதற்கு பயன்படுகின்றது. தீவிரவாதிகள் வைக்கும் முதல் இரண்டு 'பாம்" களும் சந்தானத்தினால் தான் கண்டுபிடிக்கப்படுகிறது. சீரியஸாக உற்றுநோக்க வேண்டிய காட்சியிலும் சிரிப்பு வெடி பறக்கின்றது.

டைமண்டை திருட சிங்கமுத்து போடும் மாஸ்டர் ப்ளானில் "யார் வைரத்தை எடுக்கிறது?" என சந்தானம் கேட்கும் காட்சியை நினைத்தால் இப்பொழுதும் வயிறு வலிக்கிறது. அவ்வளவு நக்கல். "காம பிசாசு" பகிடி, இறுதியில் திருடான சந்தானத்தை ஊரார் மாலை போட்டு வரவேற்கும் காட்சி என படத்தின் அனைத்து காமெடிகளும் வாய் விட்டு சிரிக்கலாம். படத்தின் இரண்டாவது ஹீரோ சந்தானம் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

ஹன்ஸிகா

இளகிய மனம் படைத்த எந்த இளைஞனும் படத்தைப் பார்க்க வேண்டாம். மூன்று நாள் தூக்கம் இல்லாமல் தவிப்பீங்க. அவ்வளவு காட்டுறார் (நடிப்பை). முகத்தில் கொஞ்சம் முற்றல் தெரிந்தாலும் கொள்ளை அழகு. அழகான பல் வரிசை. எடுப்பான தேகம். "சதைப்பிடிப்பான இடுப்பு" (மன்னிச்சிடுங்க), சிம்ரனுக்கு அப்புறமா அதிக சீன்களில் இடுப்பைக் காட்டி நடிக்கிறார். கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணியுடனேயே அலைகிறாரே கொஞ்சமாவது எங்களுக்காக இரங்க கூடாதா என ஏங்குபவர்களுக்காக கடைசி நேரத்தில் "மொடேன் ட்ரெஸ்ஸில்" வந்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றார். எல்லாம் OK நடிப்புதான் வரமாட்டேன் என்கிறது. அவ என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறா?

சில்லாக்ஸ்… பாடலில் அவ்வளவு நெருக்கம்–கிறக்கம். சங்கீதா மேடம், விஜயை கண்டிச்சு வையுங்க. இப்பிடியா ஒரு மனுசன் பூந்து விளையாடுறது கிரவுண்டில?

ஜெனிலியா

சச்சினில் இருந்து இன்றுவரை என் கனவுக்கன்னி. அவர் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியில் கிறங்கியவர்களிளே அதிகம். சில இடங்களில் பின்னணிக்குரல் அவர் வாய் அசைவுடன் ஒட்டவில்லையே. ஏன் ராஜா கொஞ்சம் கவனிக்க கூடாதா? அழகுப் பதுமை. அளவான அழகு, அளவான நடிப்பு. விஜயுடன் அவர் சேரமுடியாது போனதும் அவர் அழுதார். லட்டு மாதிரி ரெண்டு பொண்ணுங்களையும் முருகன் மாதிரி விஜய் வைச்சிருக்கிற மாதிரி திரைக்கதையை மாத்தியிருக்கலாமே ராஜா அங்கிள். ஹன்ஸிகாவைவிட காட்சிகள் குறைவுதான் இவருக்கு.

படத்தில் பல நடிகர்கள் ஒன்று, ரெண்டு சீன்களில் மட்டும் வந்து போகிறார்கள். எல்லோரும் நிறைவாகவே நடித்துச் செல்கிறார்கள். படத்தில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் பாடல்கள் மற்றும் பைட். பாடல்கள் அருமையோ அருமை. ஏற்கனவே ஓடியோ ஹிட்டான நிலையில். வீடியோ கலக்கலோ கலக்கல்.

ஓடியோ கேட்டபோது ஓப்பனிங் ஸோங்கில் வரும் அண்டம் நடுநடுங்க… இது எதுக்கையா என்று நினைத்தேன். படத்துடன் அவ்வளவு பொருந்திப் போகிறது. கலர் கலரா ட்ரெஸ் போடுறதை குறைங்க தலைவா! அவ்வளவு செட் ஆகவில்லை. வழக்கமான விஜய் படங்களில் இறுதியில் குத்துப்பாட்டு. இதில் சில்லாக்ஸை.. எதிர்பார்த்தது மிஸ்ஸாகிவிட்டது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரே பாடல் முளைச்சு மூணு… ஓடியோ செம ஹிட். வீடியோ டபுள் ஹிட். ஸ்லோ மோசனில் நடன அசைவுகள், காஸ்மீர் காட்சிகள் ப்ரமாதம். தனித்தனியே விஜயையுடன் ஹன்ஸிகா, ஜெனிலியாவை காட்டிய போதும் கன்னா பின்னான்னு நீ அழகு இருக்கிறியே.... என்ற வரியின்போது இருவரையும் காட்டியதை நினைத்து சிரித்தேன். ராஜா தப்பிக் கொண்டார்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை, சண்டைப்பயிற்சி, நடனம் என்று எல்லாமே அருமை. காவலன் தந்த வெற்றி வேலாயுதத்திற்கான எதிர்பார்ப்பை டபுள் ஆக்கியது. வேலாயுதம் தந்த வெற்றி நண்பனுக்கான எதிர்பார்ப்பினை ட்ரிபிள் ஆக்கியிருக்கு. பொங்கல் வரை பொறுத்திருப்போம்!

ஒட்டு மொத்தத்தில். வேலாயுதம் – தீபாவளி சரவெடி, எதிரிக்கு நெத்தியடி.

0 comments:

Post a Comment