Sunday, November 13, 2011

10 வயதில் குழந்தை பெற்ற சிறுமி


தற்போது குழந்தை பிறப்பது ஒன்றும் புதிய விடயம் இல்லை. மெக்சிக்கோ நாட்டில் பத்து வயது சிறுமி ஒருத்தி குழந்தை ஒன்றுக்கு அம்மாவாகி இருக்கிறாள் என்றால் நம்புவீர்களா? ஆக மொத்தத்தில் குழந்தைக்கே ஒரு குழந்தை பிறக்கிறது.

31 வாரங்களாக கருவை சுமந்து தனது 11ஆவது வயதில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் இச்சிறுமி. இக்குழந்தை 3.3 இறாத்தல் எடையுடையது. மெக்ஸிக்கோ நகரத்தின் 60 மைல் தென்கிழக்கே உள்ள Puebla என்னும் நகரத்திலுள்ள மகளிர் மருத்துவமனையில் இந்தப் பிரசவம் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு தாயான சிறுமியின் புகைப்படங்களோ அவளைப் பற்றிய தகவல்களோ வெளியிடப்படவில்லை.

இந்தச் சிறுமி (பெயருக்குத்தான் சிறுமி) அக்குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், வைத்தியசாலை அதிகாரி ரொஜிலியோ இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இச்சிறுமி கற்பழிக்கப்பட்டிருக்க வேண்டும். முறையான தந்தை யார் என்பதை விசாரித்து வருவதாக மாநில பொதுச் சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment