எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கும் 30 ஆம் திகதி வரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு இந்நாட்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் ஆட்பதிவுத் திணைக்கள ஆனையாளர் தெரித்துள்ளார். தற்போது பாடசாலை மாணவர்கள் ஒரு இலட்சம் பேரின் அடையாள அட்டைகள் தயாரிக்கொண்டிருப்பதாகவும் மேலும் ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ் அடையாள அட்டைகளை இரு வாரங்களுக்குள் வழங்கப்படுமெனவும் தெரித்தார்.
துருவம் செய்தியாளர் பஹமுன அஸாம்

0 comments:
Post a Comment