வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டயாம் என கடந்த ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் சாரதிகளிக்கு அறிவித்திருந்தும் அதை கவனத்திற் கொள்ளாது வாகனம் செலுத்திய 150 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிரான வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:
Post a Comment