(பஹமுன அஸாம்)
எட்டு ரூபாவினால் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டதால் பஸ் கட்டணங்கள் 3.5 விதத்தால் அதிகரிக்கப்படுமென நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
இதன்படி ஆரம்பக் கட்டணங்களான 7 ரூபாய், 10 ரூபாயில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், 13 ரூபாய்க்கு மேற்பட்ட தெகையில் இருந்து கட்டண மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், 1 ரூபா தொடக்கம் 20 ரூபாய் வரை இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் உடன்படிக்கையில் குறிப்பிட்டதுபோல் ஒரு மாதகாலத்துக்குள் இந்த கட்டண அதிகரிப்புக்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment