Thursday, November 17, 2011

விஞ்ஞானபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
இவ்வருடம் சம்மாந்துறை யில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர் களை பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்று பல்கலைக்கழகம் வகுப்புத் தடை விதித்திருந்தது. எதுவித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டின் பேரில் பிரயோக விஞ்ஞான 2ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்பு தடையை விதித்திருப்பதாகத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் தங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரி இன்று நண்பகல் சம்மாந்துறையிலுள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களும் மாணவிகளும் பாதையோரத்தில் பதாகைகளை ஏந்திய வண்ணம் கோசம் எழுப்பி ஏனைய பீட மாணவர்களையும் தம்மிடம் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.





பின்னிணைப்பு
புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாணவர் தங்கியுள்ள விடுதிகளுக்கு சென்று பகிடிவதை செய்வதாக தெரிவித்து பல்கலைகழக நிர்வாக பிரிவுக்கு வழங்கிய அநாமதேய தகவலொன்றுக்கு அமைவாகவே இம்மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக பல்கலைகழக் நிர்வாகம் எந்தவித விசாரணைகளையும் நடாத்தவில்லையெனத் தெரிவித்ததுடன் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் செமஸ்டர் பரீட்சை நடைபெற இருப்பதனால் அவர்களை உடனடியாக உழ்வாங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments:

Post a Comment