(பஹமுன அஸாம்)
தரக்குறைவான எரிபொருளினால் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோக பூர்வ வாகனத்துக்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்காக 50,000 ரூபாவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டஈடாக வழங்கியுள்ளது.
தரக்குறைவான பெற்றோலினால் அண்மையில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் அதற்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு மானியம் வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment