Monday, November 14, 2011

புதிதாக 6 புகையிரதப் பாதைகள் நிர்மாணம்


(பஹமுன அஸாம்)  
புதிதாக 6 புகையிரதப் பாதைகளை நிர்மாணிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹொரனையில் இருந்து பாணந்துரை வரை, குருநாகலையில் இருந்து ஹபரனையூடாக தம்புள்ளை வரை, கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை, மதவச்சியில் இருந்து திருகோணமலைவரை, வெல்லவாயவிலிருந்து பிபிலையூடாக பதுளை வரை, திருகோணமலையில் இருந்து மகாஓயா ஊடாக புத்தளம் வரை இந்த புதிய புகையிரதப் பாதைகள் நிர்மாணிக்கப் படவுள்ளது.

வெளிநாட்டு உதவிகளோடு மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, போக்குவரத்து அமைச்சின் செயலாலர் தம்மிக பேரேரா ஆகியோரின் மேற்பார்வையில் மேற்படி பாதையமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment