அசின் கொச்சியில் 6 பெட்ரூம் கொண்ட அபார்ட்மெண்ட்டை ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். இந்த அப்பார்ட்மெண்ட்தான் தனக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் சொத்துக்கள் வாங்கி குவிப்பதாக கூறுகிறார்கள். அப்படி செய்வதில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஆனாலும் எனது பெயரில் சில சொத்துக்கள் வாங்குவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
கொச்சியில் 6 பெட்ரூம் அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கினேன். ஏற்கனவே அங்கு எனக்கு இன்னொரு வீடும் இருக்கிறது. இந்த 6 பெட்ரூம் அபார்ட்மென்ட் வீடு, கடற்கரைக்கு அருகில் உள்ளது. வீட்டில் இருந்து வெளியே பார்த்ததால் ரம்மியமான அழகை ரசிக்கலாம்.
எனது பெற்றோர் மும்பையில் என்னுடனேயே வசிக்கின்றனர். அவர்கள் மாதந்தோறும் கொச்சி வீட்டுக்கு சென்று வருகிறார்கள். நானும் படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், அந்த வீட்டில் சென்று தங்க திட்டமிட்டுள்ளேன். சினிமாவிலும், வெளியேயும் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களையும் கொச்சியில் புதிதாக வாங்கிற அபார்ட்மெண்ட் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


0 comments:
Post a Comment