காலி, பலப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் முறுகல் நிலை தோன்றியிருப்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்றில் சிங்கள இளைஞர்கள் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றதையடுத்தே இரு சமூகங்களுக்குமிடையே இம்முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரியதாகவும் இதையடுதது அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் காவல் பணியில் ஈடுபடுத்தப்படடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment