Friday, November 04, 2011

கறுப்புப் பண வேட்டையில் 7 கோடி வசூல்


நுகர்வோர் அதிகாரசபை கடந்த 10 மாதங்களில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளினால் 7 கோடிக்கும் மேல் தண்டப் பணமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரை நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளினாலே இப்பணம் கிடைத்துள்ளது.

விளம்பரங்களின்போது விலையைப் பிரசுரிக்காமை, பொருட்களை பதுக்கிவைத்தல், கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு விற்றல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைப் பட்டியலைக் காட்சிப் படுத்தாமை போன்ற 27,123 குற்றச் செயல்களுக்கான தண்டப்பணத்தின் வசூலே இந்த 7 கோடி.

துருவம் அலுவலக செய்தியாளர் பஹமுன அஸாம்

0 comments:

Post a Comment