Friday, November 04, 2011

21,687 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு


டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினால் இவ்வருடம் ஆரம்பத்தில் இருந்து இதுவரையில் 21 ஆயிரத்து 687 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 150 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களே டெங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இம் மாவட்டங்களில் மாத்திரம் 12 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 100 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment