Saturday, November 05, 2011

7779 பாடசாலைகளுக்கு மதிய உணவு


நாட்டிலுள்ள 7779 பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 10 இலட்சத்து 88 ஆயிரத்து 890 மாணவர்கள் பயனடையும் நோக்குடன் மதிய உணவுப் போசாக்குத் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருவதாக அண்மையில் கல்வித்துறை பிரதியமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார்.

மிகவும் பின்தங்கிய கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களின் போசாக்கு நிலவரத்தைக் கவனத்திற் கொண்டே இம்மதிய உணவு வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழுகின்ற குடும்பங்களின் பொருளாதார பிரச்சினைகளைக் கண்டறிந்து நிவாரணம் வழங்குவதன் மூலம் இடைவிலகள், மற்றும் மந்தபோசாக்கான குழந்தைகளாக உருவாகுவதிலிருந்து ஓரளவுக்காவது விடுபடும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட மதிய உணவுதிட்டம் கடந்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை பல பாடசாலைகளில் இவ்வாறான உணவு வழங்களில் மோசடிகள் நடைபெறுவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனை வலயக் கல்வி அலுவலகங்கள்  முறையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து அவதானிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல். மன்சூர்

0 comments:

Post a Comment