சிலர் அரச காணிகளில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி அக்காணிகளை உரிமை கோருகின்றனர். இவ்வாறு உரிமை கோர்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அரச அதிகாரிகள்மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் அபிவிருத்தி, குடியேற்றம் என்ற ரீதியில் பலர் தத்தமது இடங்களை துப்பரவு செய்து காணிகளை செப்பனிட்டு வருகின்றனர். ஆனால், சிலர் நீர் நிறைந்துள்ள பள்ளக் காணிகளையும் மண்கொட்டி நிரப்பி வருவதுடன் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை தன்பின்னால் வைத்துக் கொண்டு ஆற்றோரங்கள், குளக்கரை, நெடுங்காலமாக ஓடைகளாக காணப்பட்ட இடங்கள், அரச காணிகளை உள்ளடக்கிய இடங்கள், சந்தை போன்ற இன்னோரன்ன இடங்களில் சிலர் இவ்வாறு அடாத்தாக காணிகளை தங்களுடையது என்று கூறிவருகின்றனர்.
இதனை சில அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். இவ்வாறான நடவடிக்கைளுக்கு அரச அதிகாரிகள் துணை நிற்காது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல். மன்சூர்

0 comments:
Post a Comment