Wednesday, November 30, 2011

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


(கலாநெஞ்சன்) 
2012ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மேலதிக 91 வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி என்பன இதற்கு எதிராக வாக்களித்தன. 

இந்நிலையில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது சபையில் இருந்து வெளியேறினர்.

0 comments:

Post a Comment