Wednesday, November 30, 2011

தென்கிழக்கு பல்கலைகழகத்தில் கண்காட்சி


(எஸ்.எல்.எம். மன்சூர்) 
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் கண்காட்சியும், பண்பாட்டு விழாவும் இன்று 01ஆம் திகதி முதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை ஒலுவில் பல்கலைக்கழக பூங்காவில் நடைபெறுவுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கிறார்.

இதன்மூலம் பல்கலைக்கழப் பிரதேச மக்களுக்கும், பல்கலைக்கழக சமுதாயத்திற்கும் இடையில் சிநேகபூர்வமான புரிந்துணர்வு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் முகமாக "எனது தேசத்தின் ஒருமைக்காக இணையும் கரங்கள் மாணவர் பாராட்டு விழா – 2011" எனும் பெயரில் 5 வகையான நிகழ்வுகள் தினமும் இடம் பெறவுள்ளன. இதில் கல்விக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, திரைப்படவிழா, மரபுசார்ந்த உணவுத் திருவிழா என்பவைகள் திறந்த, மேடை நிகழ்வுகளாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், சிறுவர்களது கண்கவர் நிகழ்வுகள், வினோத வேடிக்கை நிகழ்வுகள், வர்த்தகக்கண்காட்சி, சிங்கள, இஸ்லாமிய, நாட்டார் கவியரங்குகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. இதனைப் பார்வையிட மாணவர்களிடமிருந்து ரூபா 10.00 உம், வளர்ந்தோரிடமிருந்து ரூ. 30.00உம் நுழைவுக்கட்டணமாக அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்குப் பிரதேச மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கட்டாயம் கண்டுகழிக்கின்ற ஒரு நிகழ்வாக இது அமையும் என்பதனால் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்து நிகழ்வுகளை கண்டு கழிக்குமாறு மாணவ பேரவையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments:

Post a Comment