உண்மையில் மனிதவாழ்வு எவ்வளவு கஷ்டம் நிறைந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஏனெனில் அனர்த்தங்கள் பலவடிவங்களில் வந்து வாழ்வின் மகிழ்வினை தடுத்து நிறுத்தி, குடும்பச் சீரழிவுகளுக்கும், உளரீதியான அடக்கத்துவத்திற்கும் ஆட்பட்டு துன்பங்களும். துயரங்களும் நிறைந்து காணப்பட் ஆதனலால் சோபிழந்து போனோர் பலர். யுத்தத்தின் அகோரப்பசிக்கு உள்ளாகி மனைவி, மக்கள், சகோதரங்கள், குடும்பம், வீடு, சுற்றத்தார், அயலவர்; ஏன் முழுக்கிராமமும் அழிந்து அகதிவாழ்வு வாழ யுத்தவெறி காரணமாக அமைந்திருந்தாலும் மேலும் வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் தொடர்ந்த வண்ணமேதான் இருக்கின்றன. அதில் முக்கியத்துவம் பெற்றதுதான் இந்த கண்ணிவெடி அனர்த்தமாகும்.
யுத்தம் இன்று ஓய்ந்து சமாதானம் பிறந்திருந்தாலும் யுத்தப்பிரதேசவாழ் மக்கள் தமக்குரிய இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்வது என்பது இன்றுவரை கஷ்டமான காரியமாவே தோன்றியுள்ள நிலையில் அவ்வாறு செல்ல நேரிடுகின்ற போதுதான் இந்த கண்ணிவெடியும் எம்மை அழிக்க முற்படுகின்றது. யாரோ யாருக்கு வைத்த இக்கண்ணிகள் இன்று யாருக்கோ தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கின்ற ஒரு சோகநிலை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் செல்லப்போகின்றதோ தெரியாது எனமக்கள் அங்கலாய்க்கின்றனர். எனவேதான் இதிலிருந்து தம்மையும், தனது குடும்பத்தவரையும். குறிப்பாக மனிதர்களையும் காப்பாற்றுவது ஒவ்வொருவருடைய கடமையாகக்கூட கொள்ளலாம்.
இராணுவத்தினரினதும், ஏனைய கண்ணிவெடியினை அகற்றும் அமைப்பினரின் பாரிய ஒத்துழைப்புடன் இன்று வடக்கு மற்றும் கிழக்குப்பிரதேசங்களில் இதன் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்;;;கான முஸ்தீபுகள் பல எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதிகமான சிறுவர்களும், பெண்களும் இவற்றின் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடுவது இயலாதாதகாவே காணப்படுகின்றன. யுத்தவடுக்கள் விடுதலையடைந்த சுதந்திரத்தை மீண்டும் பறிக்க முயல்கின்ற காய்நகர்த்தல்களின் மத்தியில் மக்களின் துன்பதுயரங்கள் மழைபெய்தும் இன்னும் தூவாணம் விழுந்து கொண்டிருக்கின்ற நிலையில் கண்ணிவெடிபற்றிய கல்வி, மற்றும் விழிப்புணர்வுகள், நினைவாடல்கள், எச்சரிக்கை மையங்கள், அடையாளங்கள், எல்லைப் படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்று எவ்வளவுதான் முயன்றாலும் சிலவேளைகளில் அதன் தாக்கம் ஏற்பட்டே வருகிறது. இதிலிருந்து விடுபடுவதற்;;;கு பல அமைப்புக்கள் மக்களின் துயரில் பங்கெடுத்து இதிலிருந்து விடுதலையளிக்க முன்வந்துள்ளதையும் நாம் காணலாம்.
ஐக்கிய நாடுகளின் அமைப்பினது விசேட அறிக்கையின்படி சிறுவர்களே மிதிவெடிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றது. அதேநேரம். இக்கண்ணி ஒன்றின் கொள்வனவு செலவாக சுமார் ரூ 1200வாக காணப்பட, இதனை அகற்றுவதற்காக சுமார் ரூ.115.000வரையில் செலவு செய்யப்படுவதாகவும் அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் யுத்தம் ஏற்படுத்திய பின்விளைவுகளை யாரும் உணர்ந்து கொள்ளாத நிலையில் இதுபோன்ற ஈனமற்ற செயல்கள் வாழ்வில் ஏற்படுத்துகின்ற துயர்வான நடத்தைகள் எமது வாழ்வினது மனமகிழ்வை பறித்தேவிடுகின்றது. ஆதலால்தான் கண்ணிவெடி பற்றிய கல்வி இன்று மாணவர்கள் மத்தியில் பிரசாரம் பண்ணப்பட்டு வருகின்றன. மாணவர்களின் விளையாட்டுத் தனத்தினால் எதிர்கால வாழ்வு சூன்யமாகிவிடக்கூடாது என்பதற்காகவே இவைபற்றிய முழுமையான அறிவு பாடசாலை மட்டத்திலும் வழங்கப்பட்டு வருகின்றன.
வானொலி, பத்திரிகை போன்ற தொடர்பு சாதனங்கள் எவ்வாறுதான் கண்ணிவெடி அபாயத்தை கூறிநின்றாலும் நாளாந்தம் மக்கள் பாதிக்கப்பட்டே வருகின்றனர். இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பிரதேசத்தின் அல்லது குடும்ப ரீதியிலும் இவைபற்றிய பாதுகாப்புக்கள் அவசியம் உணர்த்தப்படல் வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது பிள்ளைகள் செல்கின்ற இடம், விளையாடும் இடம் போன்றவற்றை மிகவும் அவதானமாக கண்காணிப்புச் செய்வதுடன், பாடசாலைகளிலும் போதியளவு விளக்கங்களும் வழங்கப்படுகின்ற பட்சத்தில் பாதிப்புக்களிலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக அமைந்து விடுகின்றன எனலாம்.
இக்கண்ணி வெடிகள் நமது நாட்டில் மட்டுமல்ல உலகின் பலநாடுகளில் பெரியதோர் அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றன. அதனால்தான் நிலக்கண்ணிவெடிகள் அற்ற உலகத்தை தோற்றுவிப்பதற்கு உலக மட்டத்திலான ஒன்றுகூடல்களும், அறிக்கைகளும் பல வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அண்மையில் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற கார்டகெனா மாநாட்டில் செய்து கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையில் இதிலிருந்து விடுதலை அடைவதற்கு ஐந்தாண்டுகள் கொண்ட திட்டமொன்றின் வரைபுக்கு அங்கீகாரம் வேண்டிநின்றது. அதாவது மனிதர்களுக்கு எதிரான நிலக்கண்ணிகள் தடுப்பு மீதான உடன்படிக்கையின் பிரகாரம் கண்ணிகளை அகற்றுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், மீதமுள்ள சகலவிதமான கண்ணிகளையும் அழித்துவிடுதல் என்பனவற்றுக்காகவே இவை முன்வைக்கப் பட்டன.
“ஒட்டாவா” உடன்படிக்கையின் பிரகாரம் முடிவடைந்த நிலையில் 156நாடுகள் கலந்து கொண்ட இந்த கொலம்பியா மாநாட்டில் முன்னரான 10வருட அமுலாக்க ஒப்பந்தம் முடிவடைந்தும் இன்னும் நிலக்கண்ணி வெடிகளினால் மக்கள் பாதிக்கப்பட்டும், உயிர்பிழைத்தவர்களிடம் வாழ்வதற்கான நம்பிக்கை இழந்துமுள்ள நிலையில் திட்டத்தை அமுல்படுத்தியதில் தவறியுள்ளதையே சுட்டிக்காட்டி நின்றன. என்பதாக கருத்துத் தெரிவித்திருந்தார் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் உபதலைவரான கிறிஸ்டின் பீர்லி என்பவர். உண்மையில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் மாத்திரம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவேண்டி நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் சுமார் 44 மில்லியன் கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமான வெடிக்காத நிலையிலும், வெடிக்கக்கூடிய நிலையிலும் பலமில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் நிலத்தில் உள்ளன. இவ்விதமான கண்ணிவெடிகளை வெளிப்படுத்தி மக்களை அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தகங்களில் உலக நாடுகளின் ராஜாவாக கருதப்படுகின்ற வல்லரசான அமெரிக்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதிலிருந்து தப்பிக்கொண்டு வருகின்றது. எது எப்படியிருப்பினும் உலகில் அன்றாடம் பாதிக்கப்படுகின்ற மக்களின் மீட்சிக்காக பல்வேறு செயற்றிட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒருநிலையும் காணப்படுகின்றது. ஒட்டாவா உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ள பலநாடுகள் இதுவரையிலும் கண்ணிவெடிகளை அகற்றுவதில் தீர்;க்கமான ஒருமுடிவினைக்கூட எடுக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்கையில் நமது நாட்டில் முப்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்த நடவடிக்கை முடிவுற்றதன் பிற்பாடு மக்களின் வாழ்வியல் துண்பங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் மீள்குடியேறிய மக்கள் மீள்குடியேற்றப்படாத மக்கள் என பிரிக்கப்பட்டு அவர்களும் மிகவிரைவில் குடியேறிவிடுவார்கள் என்ற செய்திகளை அரசு கூறிக்கொண்டு வந்தாலும் மக்களது இயல்புவாழ்க்கையை ஏற்படுத்துவதில் இந்த கண்ணிவெடிகளும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியே வருகின்றது. குறிப்பாக இளமைத்துடிப்புள்ள இளஞ்சிறார்கள் மத்தியில் இப்பாதிப்பு மிக ஆழமாக வேரூண்டிவிடுகிறது.
அதன் காரணமாக மன அழுத்தம் உருவாகி இறுதியில் உளத்தாக்கத்திற்கு அடிமையாகின்ற ஒருநிலையில்தான் இலங்கை அரசுடன் இணைந்து யுனிசெப், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிப்பிரிவு, ஸ்பெயின் அரசாங்கம் என்பன இன்டர் நியுஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தை ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக இக் கண்ணிவெடிகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அதனால் ஏற்படவிருக்கின்ற பாதிப்புக்களை குறைக்கும் வண்ணம் "கண்ணிவெடி கவனம்" என்கிற கண்ணி வெடி அபாய கல்வியறிவூட்டல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
உண்மையில் யுத்தகாலப்பகுதியில் யுத்தப்பிரதேசங்களில் சுமார் 1.5 மில்லியன் மிதிவெடிகளும், வெடிக்கா பொருட்களும் சுமார் 40 சதுர கி.மீ. பரப்பளவில் பரவிக்காணப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில் “விழிப்போடு இருப்போம், வருமுன்காப்போம்” என்கிற ஒரு நிலையை இப்பிரதேச மக்களுக்கும், இப்பிரதேசத்திற்கு வருகின்ற மக்களிடமும் அறிவூட்டுதல் கட்டாயமாகும். அந்தவகையில் இவ்வாறான திட்டங்கள் மக்களின் வாழ்வு நிலைத்திருக்கவேண்டியே மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே மக்களின் பூரணமாண ஒத்துழைப்புக்கள் மிகமிக அவசியமாகும். அப்போதுதான் இதனது தாக்கத்திலிருந்தும், இவைகளின் பூரணமான ஒழித்தலுக்கும் வழிகோல்வதாக அமையும்.
பொதுவாக கண்ணிவெடிகள் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியவையாக காணப்படுவதால் அவற்றினைக் கண்டவுடன் யாரையும் அவ்விடத்திற்கு போகவிடாது கிராம அதிகாரியிடமோ, பொலிசாரிடமோ உடன் அறிவிப்புச் செய்ய வேண்டும். ஆபத்துக்களை அறிவிக்கும் குறியீடுகள், எச்சரிக்கை அடையாளங்களை மதித்து நடப்பதுடன், கண்ணிவெடிகள் நிலத்திலும், நீரிலும், புற்றரைகள் மற்றும் இடிபாடுகள் உள்ள இடங்களிலும் இவைகள் காணப்படலாம். அதிக அவதானத்துடன் நடந்து கொண்டால் அனர்த்த விளைவிலிருந்து தப்பிக்கொள்ளலாம். இன்று கண்ணிவெடிகள் பெருமளவில் அகற்றப்பட்டிருந்தாலும் அவை புதையுண்டு கிடக்கின்றன. எப்போதும் கவனமாகவும், அவதானத்துடனும் நடந்து கொள்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.
இன்று கண்ணிவெடிகளுக்கு அகப்பட்டு கால், கைகளை இழந்தோர் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வை எண்ணி எண்ணி மனம் வருந்திக்கொண்டு நடைப்பிணமாக உள்ளனர். இவர்களது வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல ஆர்வமிக்க தொண்டு நிறுவனங்களும், அரசுடன் இணைந்தும் இணையாமலும் பல்வேறு மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் பாடசாலையில் வேளைத்தளத்தில், பயணத்தில், வியாபார நிலையங்களில்; அவர்களுக்கு ஊக்கத்தை வழங்கி உதவும் கரங்களாக எங்களை நாங்கள் மாற்றிக் கொள்கின்றபோதுதான் அவர்களது உளம் பூரிப்படையும். யுத்தம் காரணமாக அங்கவீனர்களான படைவீரர்கள், பொதுமக்கள் நாட்டின் நாலாபுறங்களிலும் காணப்படுகின்றனர். இக்கோர யுத்தம் இன்னும் சில வருடங்கள் நீடித்திருந்தால் ஊனமுற்றோர் நாடாக மாறியிருக்கும். அந்த நிலைமை இன்று இல்லை.
இனிமேலும் இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை உரியவர்கள் எடுத்தாள்வதில்; பின்னிற்காது எதிர்கால சமுதாயம் மீட்;சி பெறுவதற்குரிய தீர்வுகளையும், திட்டங்களையும் முன்வைத்து சமாதான பூமியின் தோற்றுவாயாக எமது இலங்கை மாதாவை மீட்டெடுக்க ஒத்துழைப்பதில் அனைவரும் கவனம் செலுத்துவோமாக!
எஸ். எல். மன்சூர் (கல்விமானி)
தென்கிழக்கு துருவம் செய்தியாளர்






0 comments:
Post a Comment