Thursday, November 10, 2011

குப்பைத் தொட்டிகளாக மாறும் வடிகான்கள்


அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரதான பாதையின் இரு மருங்கிலும் வடிகான்கள் கட்டப்பட்டு சிலஇடங்களில் மூடிகளும் போடப்பட்டு வருகின்றன. வடிகான்களுக்கு அண்மையில் அமையப்பெற்றுள்ள கடைக்கார்கள், அண்மையில் குடியிருப்போர் தங்களது குப்பைகளை இங்கு வீசி விடுவதால் மக்களின் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மழை காலம் வந்தால் வெள்ளம் ஏற்படுவதற்கு இவைகள் தடைகளாக அமைகின்றன. பிரசேத சபைகள் துப்பரவு செய்து கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் குப்பைகளைக் கொட்டுகின்ற துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. இதனால் துர்நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. குறிப்பாக மக்கள் கூடுமிடங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. நுளம்பு, ஆமை, எலி போன்ற ஜந்துக்கள் குடியிருப்பதுடன் பல்வேறு நோய்த்தாக்கத்திற்கும் மக்கள் உள்வாங்கப்படுகின்றனர்.

இதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் ஆலோசனைகளை சுகாதாரத்துறை, மற்றும் பிரதேச சபையினர் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுகின்றனர்.

தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment