Thursday, November 10, 2011

பெண் சிசுக் கொலைக்கு தந்தைக்கு தூக்கு


பெண் சிசுவைக் கொலை செய்த தந்தை ஒருவருக்கு இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சியாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற நபர் பிறந்த மூன்றே நாளான தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பெண் சிசுக் கொலைக்கு எதிரான கடுமையான ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிடவேண்டும் என்பதால் இந்த தண்டனை அளிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அவரது மனைவி மூன்றாவதாக ஒரு பெண்ணை பெற்றெடுத்தால் அவர் இந்த செயலை செய்யதாகவும் அரச வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. பெண் சிசுக் கொலை மற்றும் கருக்கலைப்பு போன்றவை இந்தியாவில் அதிகம் நடப்பதன் காரணமாக மொத்த மக்கள் தொகையில் பெண்களின் விகிதாசாரம் தொடர்ந்து குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment