Thursday, November 10, 2011

மலையகத்தில் மீண்டும் பொலிஸ் பதிவு


இலங்கையின் மலையகத்தில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவசரகாலச் சட்டமும் நீக்கப்பட்டு விட்டதால், அங்கு இவ்வாறு பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மஸ்கெலியா நகரில் வசிக்கும் மக்களிடம் பொலிஸாரினால் இது தொடர்பாக ஒரு விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த நகரில் வசிக்கும் அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினரான செல்லையா சிவசுந்தரம் கூறியுள்ளார்.

அந்த விண்ணப்பப்படிவத்தில் குடும்பத் தலைவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்த வீடுகளில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் விபரங்கள் ஆகியன கேட்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டிருந்த போதிலும் அது பின்னர் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், ஆயினும் மீண்டும் அவர்கள் இவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது தமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிவசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment