Thursday, November 10, 2011

"துருவம்" வாசகன் ஒருவனின் ஆதங்கம்


வாசிகசாலை ஒன்று திறக்கப்படுமாக இருந்தால் சிறைச்சாலை ஒன்று மூடப்படுவதாக ஒரு அறிஞர் கூறுகின்றார். வாசகர்களின் அறிவுப் பசியை போக்கிடும் ஒரு நிலையமாகவே வாசிகசாலை என்று அழைக்கப்படுகின்ற நூலகங்கள் பயன்படுகின்றன. அப்படிப்பட்ட வாசிகசாலைகள் அமைதியும், சாந்தமும் கொண்டதாகவும், அழகிய சூழலையும் கொண்டு அமைந்திருப்பதுதான் வழமை.

இருப்பினும் சில இடையூறுகள், தடங்கள்கள் காரணமாக வாசிகசாலைகளின் அமைவிடம், உத்தியோகத்தர் பற்றாக்குறை, விநியோகப்பிரிவு, நூலின்மை, உபகரணங்கள் போன்றன குறைவாக காணப்படலாம். இவைகள் அனைத்தும் சாதாரண ஒரு கிராமத்தில் அல்லது மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கின்ற குக்கிராம பிரதேசங்களில் அமைந்துள்ள வாசிகசாலை என்றால் பரவாயில்லை. 

ஆனால், இவை அனைத்தையும் தாண்டிய ஒரு வாசிகசாலை அதுவும் கல்விக்கல்லூரி, ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, தேசியபாடசாலை போன்ற பல அரச நிறுவனங்களும், சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்ற ஒரு பிரதேசத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய நூல்நிலையத்தின் கதையோ வித்தியாசமானது.

மேலுள்ள குறைபாடுகள் எதுவும் இருக்கமுடியாத ஒரு வாசிகசாலையாக இது இருக்கவேண்டும் என நீங்கள் நினைப்பது சரி. அதுதான் இல்லை. வாசகர்கள் அமைதியாக இருந்து பத்திரிகை வாசிப்பதற்கு மின்விசிறிகள் எதுவுமில்லாமல், கவனிப்பாரற்ற நிலையில் ஒரு வாசிகசாலை இருக்கிறது என்றால் அது அட்டாளைச்சேனை மத்திய வாசிகசாலையே ஆகும்.

இது இன்று நேற்றல்ல பல மாதங்களாகவே காணப்படுவதுதான் வேதனையளிப்பதாக அங்கு வருகின்ற வாசகப் பெருமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதனை நிவர்த்தி செய்வார்களா? வாசக உள்ளங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? இல்லை அப்படியே தொடருமா...?




0 comments:

Post a Comment