(கலாநெஞ்சன்)
2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. இலங்கை ஏற்கனவே பெற்றிருந்த அந்த வாய்ப்பை இழந்துள்ளது.
மேற்கிந்திய தீவு, சென் கீட்ஸ் மெரியட்டில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் தகுதிபோட்டி நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை 2018ஆம் ஆண்டு நடத்துவதற்கு இலங்கையின் அம்பாந்தோட்டை மற்றும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் ஆகியன போட்டியிட்டன.
71 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்ட நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு 43 வாக்குகளும் இலங்கைக்கு 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியா பெற்றது.


0 comments:
Post a Comment