Friday, November 11, 2011

ஜே.வி.பி.யின் ஒரே நிகழ்வு இரு இடங்களில்


(கலாநெஞ்சன்)  
மக்கள் விடுதலை முன்னணி இரண்டாக பிளவுபட்டிருப்பது உலகறிந்தவிடயம். இதனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. கட்சியின் இரு பிரிவினரும் தனித்தனியாக ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி தமது மரணமடைந்த உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் நடத்துகின்ற கார்த்திகை வீரர் நினைவு தின நிகழ்வ இம்முறை இரண்டு பிரிவினராலும் இருவேறு இடங்களில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

இது மக்கள் விடுதலை முன்னணி இரண்டாக பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதுடன், இரு தரப்பினரினதும் பலத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை 13ஆம் திகதி சோமவன்ஸ அணியினர் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிலும், கிளர்ச்சிப் பிரிவினர் இதே தினம் கொழும்பு சுகததாச அரங்கிலும் கார்த்திகை வீர்ர் நினைவு தின நிகழ்வை நடத்தவுள்ளனர்.


0 comments:

Post a Comment