Wednesday, November 30, 2011

சட்ட விரோத மதுபானம் ; ஒருவர் கைது


(கலாநெஞ்சன்) 
சுட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவரை சட்ட விரோத மதுபானங்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் கிரிஹெல்ல தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக பொலிஸ் அதிகாரத்துக்குட்பட்ட தல்கத்தொட்டஓய பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது 80 சாராய பரள்களும், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு இலட்சத்து 68 ஆயிரம் (1,68 000) கிரேம் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுநாயக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் கிரிஹெல்லவின் உத்தரவின் பேரில் சார்ஜன்ட்களான நாணயக்கார, நாமல் ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment