Wednesday, November 30, 2011

ஒலுவில் பாடசாலைக்கு ஹரிஸ் எம்.பி. நிதி

(எஸ்.எல்.மன்சூர்) 
ஒலுவில் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலையான அல்-அஸ்ஹர் வித்தியாலத்தின் ஒரு பகுதி சுற்றுமதிலை அமைப்பதற்காக வேண்டி திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். பாடசாலையின் அபிவிருத்தி அமைப்பினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பாடசாலையின் சுற்றுமதிலின் ஒரு பகுதி முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment