(றிஸான் முகம்மட்)
பான் ஏஷியா வங்கியின் 60ஆவது கிளை அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதி, இல 280இல் அமைந்துள்ள கையூம் கட்டிடத் தொகுதில் புதிய கிளை அமைந்துள்ளது. பான் ஏஷியா வங்கித்தலைவர் ஏ.ஜி.வீரசிங்க புதிய கிளையை சுப நேரத்தில் நாடா வெட்டித் திறந்து திறந்து வைத்ததுடன், மங்கல விளக்கையும் ஏற்றி வைத்தார்.
கிளை முகாமையாளர் எஸ்.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பொது முகாமையாளர் இரிஷாட் அலி உட்பட பான் ஏஷியா வங்கி உயரதிகாரிகள், வாடிக்கையாளர்கள் என அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர். முதலாவது வைப்பினை பிரதம அதிதி, வங்கித் தலைவர் வீரசிங்க, தொழிலதிபர் ஏ.பி.அப்துல் கையூமிடமிருந்து ஏற்றுக் கொண்டார். திறப்பு விழவைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் வீரசிங்க உரையாற்றினார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் 100 பான் ஏஷியா வங்கிக் கிளைகளைத் திறந்து சேவை வழங்குவதுடன், தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதே எமது எதிர்கால இலக்கு என அவர் குறிப்பிட்டார்.







0 comments:
Post a Comment