(ஏ.ஜே.எம்.ஹனீபா)
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அம்பாறை - கல்முனை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதியின் மேலாக சுமார் 1 தொடக்கம் 2 அடி வரையான வெள்ள நீர் பாய்த்து செல்கின்றது இதனால் பிரதான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அதுமாத்திரமன்றி நாவிதன்வெளி பிரதேசத்துக்கான இருவளி பாதைகளும் போக்குவரத்து செய்யமுடியாமல் தடைப்பட்டுள்ளது அதாவது கல்முனை நற்பிட்டிமுனை ஊடாக நாவிதன் வெளிக்கு பிரயாணம் செய்யும் கிட்டங்கி தாம்போதி வீதி முற்றாக போக்குவரத்து செய்யமுடியாதுள்ளது அதே போன்று சம்மாந்துறை ஊடாக நாவிதன்வெளிக்கு பயனிக்கும் வழுக்காமடு வீதியூடாகவும் பயணம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளிப் பிரதேசங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேசத்துக்கு அரச கடமைக்காக செல்பவர்கள் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் தத்தமது பிரதேசங்களிலுள்ள காரியாலயங்களில் கடமைகளில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இதே சமயம் சம்மாந்துறை பிரதேசத்தில் சில இடங்களில் வீடுகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்வதற்கான முகாம் ஏற்பாடுகளை சம்மாந்துறை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment